Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil)  28-01-2021

இன்றைய தியானம்(Tamil)  28-01-2021

நீ இல்லாவிடில்.... 

“எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும்.” – 1 நாளா. 29:12

தீ பற்ற வைக்கப்பட்ட ஒரு விறகுக்கட்டை ஆரம்பத்தில் கொழுந்து விட்டு எரிகிறது. நேரம் ஆக ஆக அனல் அணையும் தருவாயில் ஒருவர் வந்து ஊதும்போது திரும்பவும் அனல் பற்றிக் கொள்கிறது. இன்னும் சற்று நேரத்தில் தீ அணைந்து கரிக்கட்டையாகி சாம்பலாக மாறிவிடுகிறது. இதைப் போல தான் ஒருவருடைய ஆவிக்குரிய வாழ்வு அனலாய் ஆரம்பமாகிறது. காலப்போக்கில் ஜெபமின்மை, தேவனுடைய வார்த்தையை அலட்சியம் பண்ணுதல், கீழ்ப்படியாமை, துணிகரம் இவையெல்லாம் சேர்ந்து ஆவிக்குரிய குளிர்ந்து போன நிலைமைக்கு கொண்டு வந்து விட்டுவிடுகிறது. இதுதான் பின்மாற்றம். இப்படி பின்மாற்றமடைந்த ஒருவரை வைத்து தேவனுடைய திட்டம் தடைபட்டால் அவர்களுக்கு பதில் சிறுவர்களைப் பயன்படுத்த தேவன் எழுப்பியதை வேதத்தில் காண்கிறோம். 

ஏலியின் ஆசாரிய ஊழியம் அனலற்று இருந்தது. அவருடைய பிள்ளைகள் இருவரின் துன்மார்க்கத்தை அவர் கண்டிக்கவில்லை. அன்னாளின் கண்ணீரையும் தவறாய் கணிக்கும் நிலை. தேவன் பேசும் வார்த்தைகளை கேட்கும் இருதயம் ஏலியிடம் இல்லாததாலோ என்னவோ தேவன் சிறுவன் சாமுவேலிடம் தன் பாரத்தை பகிர்ந்து கொண்டார். இஸ்ரவேலின் முதல் இராஜாவாக தேவன் ஏற்படுத்தின சவுல் ராஜா தேவனுக்கு கீழ்ப்படியாததால் அந்த இடத்திற்கு இளைஞன் தாவீதை கொண்டு வருகிறார். தேவன் தாவீதை பயன்படுத்த ஆரம்பித்தவுடன் சவுலின் வாழ்க்கை கசப்பானது. 

தேவனுடைய ஊழியத்தை செய்து கொண்டிருக்கும் அன்பரே! உங்கள் ஸ்தானத்தை நீங்கள் அலட்சியம் செய்யும் போது, அதே இடத்தில் வேறு ஒரு மனிதனை ஏன் வயதில் மிகச் சிறியவர்களைக்  கூட தேவன் எழுப்ப வல்லமையுள்ளவர். ஆம், தேவனுடைய பாரத்தை சுமக்காதவன் வருத்தத்தையே சுமப்பான். ஆத்துமாக்களுக்காக பாரப்படாமல் நாம் வாழ்ந்து கொண்டிருப்போமானால், இறுதியில் நமக்காகவே பாரப்பட வேண்டியதாகிவிடும். நமக்கு தேவன் கொடுத்த பொறுப்பில், ஊழியத்தில் அலட்சியம் காண்பிப்போமானால், லட்சியத்தை நிறைவேற்ற மற்றவர்களை பயன்படுத்துவார். தேவ அழைப்பை மறக்கும் போது, நம் பிழைப்பை தேட வேண்டிய சூழ்நிலை வரும். ஆகவே பெற்ற அபிஷேகத்தையும், ஊழியத்தையும் இழந்துவிடாமல் காத்துக் கொள்வோம். ஆமென்! 
-    Bro. அருண் ஆபேல்

ஜெபக்குறிப்பு:
பைபிள் காலேஜ் மாணவர்கள் தங்க கட்டப்பட்டுவரும் விடுதி கட்டிட வேலைகள் நேர்த்தியாய் நடைபெற ஜெபியுங்கள்.  

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app: 
தமிழில் பெற -  +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.vmmorg.template.msmapp

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250


Comment As:

Comment (0)